IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி, 29 ஜூன், 2012

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (பகுதி – 01)


உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமான இஸ்லாம் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அறிந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது.நமது அன்றாடப் பிரச்சினைகள்,குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்;டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.
இஸ்லாம் சொல்லும் பொருளாதராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான் வட்டி தொடர்பான இஸ்லாமிய நிலைபாடு. நரகத்திற்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தரும் இந்த வட்டிக் கொடுமை பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் நாம் இந்தத் தொடரின் மூலம் சுறுக்கமான தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறோம்.
வட்டியின் விபரீதம் என்ன? வட்டியில் சின்ன வட்டி, பெரிய வட்டி என்று பிரிப்பதற்கு ஏதும் முகாந்திரம் உண்டா? சின்ன வட்டி ஹழாலானது என்று ஒரு சிலர் வாதாடுகிறார்களே அதைப்பற்றிய உண்மை நிலை என்ன? வங்கி வட்டியின் நிலைபாட்டை இஸ்லாம் தடை செய்கிறதா? போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை இந்தத் தொடரில் நம்மால் முடிந்தவரை தெளிவுபடுத்த நினைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
இந்தத் தொடரில் முதலாவதாக வட்டி பற்றி திருக்குர்ஆன் கூறும் தகவல்களை முதலில் பார்த்து விட்டு வட்டியைப் பற்றிய சட்டங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.
வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது(ஹராமாக்கப்பட்டுள்ளது).
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131) 
நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)
வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275) 
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வட்டி அழிக்கப்பட்டுதர்மம் வளர்க்கப்படுகிறது.
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)
வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275) 
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)
வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான். 
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)
நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது. 
فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)
வட்டி செல்வத்தை பெருக்காதுஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.
وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வட்டியின் விபரீதங்கள் பற்றி குறிப்பிடப்படுபவைகள். வட்டியை இறைவன் தடை செய்ததாகக் குறிப்பிடும் வசனங்களை மாத்திரம் நாம் பார்த்தோம்.
வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:    குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகுஅவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்).  (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்கஅவர்கள் நபி (ஸல்) அவர்கள்நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும்உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள்.    (புகாரி – 2086,2238)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன்,உண்ணக் கொடுப்பவன்எழுதுபவன்சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)
வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பெரும்பாவங்களில் ஒன்று.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள்பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள்அல்லாஹ்வின் தூதரே! அவை யாவைஎன்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,சூனியம் செய்வதுமுறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பதுஅநாதைகüன் செல்வத்தை உண்பதுபோரின்போது புறமுதுகிட்டு ஓடுவதுஇறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று  கூறினார்கள்.( புகாரி – 6857)
ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…………….
tnanks rasminmisc.com

சனி, 23 ஜூன், 2012

”மம கட்சியின் சமுதாயத் துரோகம்” – பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு


24-6-2012 ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் நேரடியாக ஒளிபரப்பாகும். பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும் பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்
இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் தமுமுக மோதல்


லால்பேட்டை,ஜுன் 23
/
நாளை 24.06.2012 லால்பேட்டை நகரில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,அப்துல் ரஹ்மான் எம்.பி.ஆகியோர் கலந்து கொள்ளும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி அக்கட்சியினர் தலைவர்களை வரவேற்க புது பஜார் சந்திப்பு பகுதியில் கொடி,பேனர்கள் வைத்துள்ளனர்.
/
நாலை லால்பேட்டை அருகில் உள்ள மானியம் ஆடூர் கிராமத்திர்க்கு தமுமுக,ம ம க வின் தலைவர் வருகிறார் அப்போது லால்பேட்டை புது பஜாரில் கொடி ஏற்ற ஏர்பாடு செய்து பஜார் மற்றும் வடக்கு தெரு பகுதியில் தமுமுக, மமக கட்ச்சியினர் தோரனம் கட்டினர் ஆனால் தோரனம் கட்டுவதில் முஸ்லிம் லீக், தமுமுக, மமக கட்சிக்கிடையே இரண்டு நாட்களாக கருத்து வேறுபாடாக இருந்து வந்தது.
/
இன்று பிர்பகள் 12.30 மணியளவில் புது பஜாரில் உள்ள முஸ்லில் லீக் அலுவலகம் அருகில் முஸ்லிம் லீக் கட்சியினர் தோரனம் கட்டினர் அப்போது தமுமுக தொண்டர்கள் அங்குவந்து இந்த இடத்தில் நாங்கள் கொடுயேற்ற உள்ளோம் எனவே இங்கு தோரணம் கட்டகூடாது என்று தடுத்தனர் அதனால் முஸ்லிம் லீக் .தமுமுக இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது ஆபாசாவார்தைகள் அல்லி வீசப்பட்டது இதனால் லால்பேட்டையில் பெரும் பதட்டமான சூல்நிலை ஏற்பட்டது உடன் காவல் துரைக்கு தகவல் தெறிவிக்கப்பது உடன் டி எஸ் பி தலைமையில் மத்திய சிறப்புப்படை சம்பவ இடத்திர்க்கு வந்து முகாமிட்டு அமைதி படுத்தியது.
/
மதியம் 2.30 மணியளவில் காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் இருதரப்பினர்கள் பேச்சுவர்த்தை நடைப்பெற்றது அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லால்பேட்டை உள் பகுதியில் இரு அணிகளும் எந்த தோரனமும் கட்டக்கூடாது எனவும் கட்டிய அனைத்து தோரணங்களையும் அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
/
மாலை 5.30 மணியளவில் காவல்துரை அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து தோரணங்களும் அகற்றப்பட்டது.

ஞாயிறு, 13 மே, 2012

திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?




கிறுத்துவ நண்பர்களே! நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள பைபிளை நாங்களும் இறைவனால் வழங்கப்பட்டது என நம்புகிறோம், ஆனால் அது பாதுகாக்கப் படாத (அதாவது அதில் உங்களின் மூதாதயர்களின் சொந்தக் கறுத்துகளும் கலந்துவிட்ட) காரணத்தால் அதனை இப்போது அமல் படுத்த கூடாது என்கிறோம்.
இறைவனால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன் ஆகும். மேலும் அது யுகமுடிவு வரை பாதுகாக்கப்படும் என்று இறைவனால் உத்திரவாதம் பெற்றுள்ளதுமாகும்.
சரி, திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?
இதற்கு பதிலளிப்பதற்கு முன் இறைவேதத்தின் முக்கிய பணி என்ன என்பதில் தெளிவுபெறுவது உகந்தது. "மறுமையில் நடக்கவிருக்கும் நிலைமைகளைக் கூறி எச்சரிக்கை செய்வதும், மனிதனின் வாழ்கைக்கு தேவையான சட்டங்களைக் கூறுவதும் இறைவேதத்தின் முக்கிய பணியாகும்".
ஆதம் நபி காலத்தில் சகோதரியை திருமணம் செய்ய அப்போதுள்ள இறைச்சட்டம் அனுமதித்து. இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டம் என்றாலும் இன்று அது செல்லாது. இதனை அறிந்ததாலேயே அச்சட்டத்தைப் பாதுகாப்பதாக இறைவன் வாக்களிக்க வில்லை. இதுபோன்ற காரணங்களாலே இதற்கு பின் வந்த வேதங்களும் (பைபிள் வரை) பாதுகாக்கப்படவில்லை.
நாம் இப்போது யுகமுடிவின் சமீபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆதலால் இறைவேதத்தின் கடைசி பதிப்பு நமக்கு வழங்கப்பட்டு விட்டது. அதுவே திருக்குர்ஆன் ஆகும். இதிலுள்ள சட்டங்களை யுகமுடிவு வரை அமல் படுத்துவதே வெற்றிக்கு ஒரே வழி ஆகும்.
(திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதில் தெளிவுபெற THE BIBLE AND QURAN IN THE LIGHT OF SCIENCE-MARIS PUGAIL, ஏசு இறைமகனா?-பி.ஜெ. போன்ற நூல்களும், டாக்டர்.ஜாகிர் நாயிக் Vs வில்லியம் கேம்பில் போன்ற விவாதங்களும் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.)
Thank you!
அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்.

சனி, 14 ஏப்ரல், 2012

கிறித்தவ சபைகளுக்கு எதிராக மட்டும் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்?


கேள்வி :
சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, தாங்களும், உங்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்?
எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) கொலை வெறி தாக்குதல் நடத்துவது ஏன்?
இது போல் இந்து மதத்தை விமர்சிக்கவில்லையே ஏன்?
மற்ற மதத்தினரை விமர்சிக்கக்கூடாது; உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்குஎன்ற குர்ஆன் வசனத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆனால், நாங்கள் குர்ஆன் வசனத்தை கடைபிடித்து வருகின்றோம்.  எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை.
ஜெஸ்ஸி ராணி - மங்கலம்பேட்டை 


பதில் :

இந்து மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக்கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக்கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.

ஆனால், கிறித்தவ பிரச்சாரகர்களின் முழு நேர வேலையே இதுவாகத்தான் உள்ளது.

அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி,  தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, “குர்ஆனில் ஈஸாஎன்று நூல் வெளியிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் பயன்படுத்தும் கியாமத் நாள் என்ற பெயரில் நூல் வெளியிட்டு முஸ்லிம் அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கின்றனர்.

இந்த பாதிரிகள் ஆலிம் அப்துல்லாஹ்,  மவ்லவி பிலால் ஆகியோர் நற்செய்தி கூட்டங்களில் பேசுவதாக விளmபரம் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். ஆனால் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; செத்த பிணங்கள் உயிரோடு எழும்பி வருகின்றன  என்ற நிகழ்ச்சி போல் இதுவும் செட்டப் நிகழ்ச்சிதான். 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் திட்டி தபால் பெட்டி எண் மட்டும் போட்டு நோட்டீஸ்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்கள் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து நற்செய்தி என்ற பெயரில் தங்கள் மதத்தில் சேருமாறு கூறும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கை எல்லை மீறிப்போய்க் கொண்டு உள்ளது.

தங்கள் கல்விக் கூடங்களில் அனைவரும் இயேசுவைத் தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

ஆபாசப் புத்தகத்தை வேதமாக வைத்துக் கொண்டு எங்களை உங்கல் மதத்துக்கு அழைக்க வந்து விட்டீர்களா? பொய்களையும் புரட்டுகளையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் சிறந்த கொள்கை என்று சொல்கிறீர்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அனைத்து முஸ்லிம்களையும் தயார்படுத்தும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

இதனால் தான் விவாதக் களத்தில் சந்தித்து கிறித்தவ மதத்தை எங்களிடம் பிரச்சாரம் செய்ய அவர்களே வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தவே அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்க வற்புறுத்துகிறோம்.

இந்துக்களின் ஊர்களில் இவர்கள் வாலாட்டினால் அவர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கும் சமபவங்களை நாம் பார்க்கிறோம். அது போல் செய்யாமல் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அறிவுப்பூர்வமான நெருக்கடியை தான் ஏற்படுத்துகின்றோம்.

இத்தனை ஆண்டுகளாக கிறித்தவப் பிரச்சாரம் என்ற பெயரில் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடித்து வரும் பாதிரிமார்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்-அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு



இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் ‍அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிகொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார்.நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலலிக்காமல்) பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.அப்போது (அங்கிருந்து மக்களில் சிலர்), நபி(ஸல்) அவர்கள் அவர் கேட்ட கேள்வியை செவியுற்றார்கள்,ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி(ஸல்) அவர்கள் விரும்ப வில்லை.மற்ற சிலர் அவர் கேட்ட கேள்விஅயி நபி (ஸல்)கேட்டனர் என்றனர். நபி(ஸல்) தமது பேச்சை முடித்து விட்டு."மறுமை நாளை பற்றி என்னிடம் கேள்வி கேட்டவர் எங்கே என்றனர்.உடனே அல்லாஹ்வின் தூதரே நான்தான் என்றார்.அமானிதம்_அடைக்கலம் பாழ்படுத்தபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்"என்று சொன்னார்கள்.அதற்கு அந்த கிராமவாசி அது எவ்வாறு பாழ்படும் என்றார்.அதற்கு நபி (ஸல்) இவ்வாறு பதிளலித்தார்கள்:அதிகாரம் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்,என்று பதிலலித்தார்கள்.
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம் என்று கூறினார்கள்.அவர் அல்லாஹ்வின் தூதரே அது எவ்வாறு பாழ்படுத்தபடும் என்று கேட்டார். ஆட்சி அதிகாரம் நீதி நிர்வாகம் போன்ற எந்தபொறுப்பும் அதற்கு தகுதியற்றவரிடம் ஒப்படைக்கபடும்போது மறுமை நாளை எதிர்பார்த்துகொள்,என்று பதில்லித்தார்கள்
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_5496