IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய், 17 மே, 2011

அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய அழகிய பண்புகள்.

நமது ஜமாஅத்தின் தாயீக்கள் (பிரச்சாரகர்கள்) அவர்கள் நம் அனைவருக்கும் தாய்கள். அதாவது அழைப்பாளனிடத்தில் ஒரு தாய்க்கான பக்குவமும் பொறுமையுடன் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.
பிரச்சாரகர்கள் கத்தியின் மீது நடப்பதற்குச் சமமானவர்கள். கொஞ்சம் கவனம் தவறினாலும் ஆபத்து நடப்பவருக்கே என்பதை நன்குணர்ந்திருக்க வேண்டும்.
ஒரு அழைப்பாளன் ஆபத்தை உணராமல் போதுமான பக்குவமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதினால் அவருக்கும் அவரைச் சார்ந்த கொள்கைக்கும் பங்கம் வந்துவிடும் என்பதை முதலில் புரிந்திருக்க வேண்டும்.
எனவே ஒரு அழைப்பாளனிடத்தில் முடிந்தளவுக்குக் குறைகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
பாலியல் குறித்த பார்வை பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வைப் பெற்றவராக ஒரு அழைப்பாளர் இருக்க வேண்டும். இது போன்ற விசயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காதல் கத்தரிக்காய் போன்ற வேலைகளைச் செய்யவே கூடாது. சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாத இந்தப் பண்புகள் ஒரு அழைப்பாளனிடம் அறவே கூடாது.
சில ஊர்களில் சில பெண்களே ஆலிமிடம் கேள்வி கேட்பதாகச் சொல்லிக் கொண்டு சும்மா சும்மா எதையாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதும் தவறான விஷயம். அடிக்கடி போன் செய்து ஆலிமிடம் பேசி, கடைசியில் காதலில் விழுகிற, விழ வைக்கிற பிரச்சாரகர்களும், தவ்ஹீத் என்ற பெயரில் இந்தக் காரியங்களைச் செய்யும் பெண்களும் இதுபோன்ற மானக்கேடான, வெட்கங்கெட்ட செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், பெண்கள் குழைந்து பேசுவதும் அதிக உரிமை எடுத்துப் பேசுவதும் தான். எனவே ஒவ்வொரு பெண்ணும் பிரச்சாரகர்களிடத்தில் கேள்வி கேட்கும் போதும் ஏதேனும் ஒரு தேவையைக் கேட்கும் போதும் தனது தந்தை, சகோதரன், மாமா போன்ற மஹ்ரமான நபர்களிடம் கேள்வியை எழுதிக் கொடுத்து கேட்கச் சொல்லலாம். அல்லது அவர்கள் மூலமாக கேட்டுவரச் சொல்லி பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு வழி இல்லாத போது, மார்க்கம் சொல்லுகிறபடி குழையாமல் நெளியாமல் மென்மையில்லாமல் கேள்வியை நெற்றியில் அடித்தாற்போல் கேட்டு முடித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் பேசக் கூடாது.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன்: 33:32
நிர்வாகத்தினரில் சிலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி பிரச்சாரகர்களை அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே தங்களது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். அதுவும் அவருடன் நாமும் இருப்பது கட்டாயத்திலும் கட்டாயம். பிறகு தவறான அசம்பாவிதங்கள் நடந்தால் இரு தரப்பு நஷ்டத்தினையும் அந்த நிர்வாகியே சந்தித்தாக வேண்டும். திருமணமாகாத பிரச்சாரகர்களுக்குக் கடையில் சாப்பாடு ஏற்பாடு செய்வதே சிறந்த வழிமுறை. அவரை அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பதை கட்டாயம் தவிர்ந்து கொள்வது இரு சாராருக்கும் நல்லது. அதே போன்று சிலர் அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பார்கள். இதிலும் கவனம் மிக முக்கியம்.
இவையெல்லாம் ஒரு அழைப்பாளனை பாலியல் சீண்டல்களிலிருந்தும் கெட்ட சிந்தனைகளிலிருந்தும் பாதுகாக்கும். ஏன் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், பிரச்சாரகர்களும் மனிதர்கள் தாம் என்பதை எந்த நேரத்திலும் நிர்வாகத்தினர் மறந்துவிடக் கூடாது. இவரெல்லாம் இப்படிச் செய்வாரா என்ற எண்ணத்தை அறவே ஒழித்துவிட்டு, முடிந்தளவுக்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையையும் மீறாமல் நடந்து கொள்ள முயற்சித்தால் பாலியல் குறித்த ஒரு சில குற்றச்சாட்டுகளும் நடக்காமல் தடுக்கலாம்.
நிர்வாக நட்பு குறித்த பார்வை நிர்வாகிகள் தங்களது பிரச்சாரகர்களிடத்தில் எப்போதுமே மரியாதையாக நடந்து கொள்வது ஆரோக்கியமான நட்பாகவும் பணிகளைச் சரியாகச் செய்வதற்கும் வழிவகுக்கும். நிர்வாகத்தில் இருக்கிற தனி நபர்கள் அவருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். அதே போன்று பிரச்சாரகர்களும் நிர்வாகத்தினரிடம் தேவைக்கு ஏற்ப பழகினாலே போதுமானது. எப்போதும் அவர்களின் மரியாதையை தனிமையிலும் பிறருக்கு முன்னிலையிலும் குறைத்துவிடக் கூடாது. நிர்வாகத்தினருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அளவுக்கு அவர்களிடம் நட்பைப் பேணினால் அதுவே போதுமானதாகும். நிர்வாகத்தில் ஆலோசனை செய்யும் போது, தன்னுடைய கருத்துத் தான் சிறந்தது என்று நினைத்துக் கொண்டு, தனது கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் இருப்பதே பிரச்சாரகருக்கு உகந்தது.
நிர்வாகத்தினரும் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் தான் அழைப்பாளர் இருக்க வேண்டும் என்று நினைத்து கரடுமுரடாகக் கட்டளையிடாமல், அதிகாரத் தொனியில் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும். பிரச்சாரகராக இருப்பவர், நிர்வாகத்தினரிடமும் பொதுமக்களிடமும் குறைகள் இருந்தால் தகுந்த நேரத்தில் தகுந்த மாதிரி கையாண்டு குறைகளைச் சரிசெய்ய முயற்சிக்காமல், எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே திரியக் கூடாது.
அதே போன்று நிர்வாகத்தினரும் அனுபவமில்லாத அழைப்பாளரை அலைக்கழிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுத்து நல்ல பக்குவமிக்க அழைப்பாளனாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதெனில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உபதேசம் பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. அல்குர்ஆன் 103வது அத்தியாயம்
முதலில் நிர்வாகிகள் அழைப்பாளரையும், அழைப்பாளர் நிர்வாகத்தினரையும் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் புரியாமல் நடப்பதினால் தான் பிரச்சனைகள் எழுகிறது.
அதே போன்று ஒவ்வொருவரும் பிறரைத் தவறாக எண்ணாமல் இருக்க வேண்டும். ஒருவரைத் தவறாக எண்ணும் போது அவர் செய்கிற அனைத்துமே எரிச்சலூட்டுவதாகத் தான் மற்றவர் கருதுவார்.
எனவே இருவரில் ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் மறுமை நன்மைக்குத் தான் செய்வார் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவரும் அது போன்றே நினைத்துக் கொள்ள வேண்டும். இப்போது யாராவது ஒருவர் தவறு செய்யும் போது, அதைப் பற்றி தௌவுபடுத்துவற்கு விளக்கம் கேட்கலாம்.
பொறுமையும் கலந்தாலோசித்தலும் சிலர் தன்னிச்சையாகச் செயல்படுவதினால் தான் நிறையக் குழப்பங்கள் உருவாகின்றன. எனவே எதையும் சக நிர்வாகிகளுடனும் அழைப்பாளர்களிடமும் ஆலோசித்து விட்டுத் தான் களத்தில் இறங்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது என்பார்கள். எனவே நிர்வாகியாக இருந்தாலும் அல்லது பிரச்சாரகராக இருந்தாலும் எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் எதையும் சரியாக முழுமையாக முறையாகச் செய்ய முடியாது என்பதை இருவருமே கற்றுக் கொள்ள வேண்டும். ரோஷம் (ஈகோ) களைந்தால் மோசம் வராது ஈகோ என்கிற ரோஷம் கொள்கிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை கைவிட்டால் எட்டாதவையும் கைகூடும் என்பதில் எள்முனைக்கும் சந்தேகமில்லை. நீ என்ன கேட்பது? நான் எதையும் செய்வேன் என்கிற மனப்பாங்குடன் செயல்படுவது நிர்வாகத்திலும் பிரச்சாரக் களத்திலும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்திவிடும். இன்று நம்மிடத்தில் பலர் கொள்கையிலிருந்து புரண்டதற்குக் கூட தேவையில்லாத ரோஷ உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே காரணம் எனலாம். அதே நேரத்தில் ரோஷமே படக்கூடாதா என்றால், உலகில் அப்படியொருவன் மனிதனா என்று கேட்கத் தோன்றும். ஆனால் இவன் சொல்லி நான் கேட்பதா? என்ற ஈகோவிற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.
எனவே எதற்கெடுத்தாலும் தனது மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகக் காரியத்தை நிறைவேற்றாமல் இறை திருப்திக்காக செயலாற்ற வேண்டும்.
கொள்கைத் தவறுகளும் குழப்பங்களும் ஏற்படும் போதும், நமது ஜமாஅத்தின் மதிப்பைக் குறைக்கிற எதற்காகவும் ரோஷப்படுவது நியாயமானது. அதைக் குறை சொல்ல முடியாது. பாராட்ட வேண்டிய பண்பு தான். பணியைப் பகிர்ந்தளிக்காமை
பிரச்சாரகர்களிலோ நிர்வாகத்தினரிலோ அனைத்துப் பணிகளையும் தானே சுமந்து கொண்டு, தானும் சரியாக முறையாக முழுமையாக நிறைவேற்றாமல் பிறருக்கும் பகிர்ந்தளிக்காமல் அதைப் பற்றி பேசிப் பேசியே நேரம் கடத்துகிறவர்களும் நம்மில் உண்டு. எந்தப் பணியைத் துவங்கினாலும் அதை முடிக்காமல், நானே அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எதையும் செய்ய மாட்டார்கள். இத்தகையவர்கள் நமது ஜமாஅத்தின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே எந்தப் பணியாக இருந்தாலும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், யார் யாரெல்லாம் எதை எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே ஆலோசனை செய்து, அதன் பிரகாரம் பணிகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அதில் எவராவது கொடுத்த பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் அவரைக் கண்டிப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் இப்படி பணியைப் பகிர்ந்தளிக்கும் போது தான், யார் யார் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும். மக்களோடு மக்களாகப் பணி செய்தல் பிரச்சாரகர்களில் பலரிடம் இருக்கும் குறை இது. மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றாமல் வெறுமனே சொற்பொழிவுகளை மட்டுமே செய்து கொண்டிருக்கக் கூடாது. அதே போன்று சில இடங்களில் எல்லா வேலைகளையும் பிரச்சாரகர்களிடத்தில் விட்டுவிட்டு எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிற நிர்வாகிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சில ஊர்களில் ஒரு தெருமுனைப் பிரச்சாரம் நடக்கிறதென்றால், அழைப்பாளரே சேர் போடுவது, ஒலி பெருக்கியை வைப்பது என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சொற்பொழிவையும் அவரே நிகழ்த்துவார். இது பரிதாபமான நிலை. இந்த நிலையை மாற்றி மக்கள் அழைப்பாளரோடும் அழைப்பாளர் மக்களோடும் கலந்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். எனவே நாம் செய்கிற அனைத்துப் பணிகளையும் ஒழுங்காகவும் முழுமையாகவும் செய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறைகள் யாரிடமிருந்தாலும் சரி செய்து கொண்டு, நிறைகளுக்காக இறைவனைப் புகழ்ந்து, எண்ணத்தில் கலப்பில்லாமல் இறைவனுக்காகவே எல்லாவற்றையும் செய்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக நமது பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வழிவகுப்பானாக!

சத்தியத்தை சொன்னால் சோதனை நிச்சயம்!!









ஸஃது (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ''நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள். நூல்: திர்மிதி 2322இன்று குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என உறுதிகொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கின்ற ஒவ்வொருவரும் மேற்கண்ட ஹதீஸை மனதில் நிறுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இன்று தான் ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் எவ்வளவு திருப்பங்கள் மாற்றங்கள் கருத்துருவாக்கங்கள்.ஒரு நேரத்தில் தர்ஹா வழிபாட்டை எதிர்த்து, மத்ஹபு பிரிவுகளை எதிர்த்து, சடங்கு சம்பிரதாயங்களை, பித்அத்தான அனாச்சாரங்களை எதிர்த்தவர்கள், வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என சூளுரைத்தவர்கள், ஊரை எதிர்த்து சமுதாயத்தை எதிர்த்து குடும்பத் தினரை எதிர்த்து, ஏன்? பெற்றெடுத்த தாய் தந்தையர்களைக் கூட எதிர்த்து எங்களுடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் தான் நாங்கள் பின்பற்றுவோம். மார்க்க விஷயங்களில் எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டோம் என மார் தட்டியவர்கள், இது போன்று எதிர்த்துக் கூற வ­மையில்லா விட்டாலும் நீங்கள் செய்வது சரிதான். இதுதான் சரியான வழிமுறை என்று ஆதரவாகப் பேசியவர்கள் இவர்களுக்கு மத்தியில்தான் எவ்வளவு திருப்பங்கள்.இக்கட்டுரையை எழுதுகின்ற நான் இந்த உண்மையான ஏகத்துவக் கொள்கையை விளங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றது. ஆனால் எனக்கு ஏகத்துவத்தைப் போதித்தவர்கள் தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் ஆணி வேராகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் மூலம் நான் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னால் தமிழக முஸ்­லிம்களின் மார்க்கத்தின் நிலைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இஸ்லாமிய சமுதாயம் ஓரிறைக் கொள்கைளை விளங்காமல் இணைவைக்கும் காரியங்களில் தான் மூழ்கிக் கிடந்தார்கள். இவைகள் தான் நம்மை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக் கூடியவை என்று ஒரு ஆழமான நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எங்கு நோக்கினும் கோயில் வழிபாடுகளைப் போல் மக்கள் தர்ஹாக்களிலும் கந்தூரி உரூஸ் திருவிழாக்களிலும் தான் மூழ்கிக் கிடந்தனர். தாயத்து தகடுகள் தான் அவர்களின் வீடுகளிலும் கடைகளிலும் அவர்களின் உடல்களிலும் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.ஃபாத்திஹாக்கள், மவ்லூதுகள், நூறு மஸாலாக்கள் தான் அவர்களுக்கு இறைவேதம் போல் காட்டப்பட்து. திருமறைக்குர்ஆனை மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய ஆ­ம் பெருமக்களே அதனைத் தமிழில் வெளியிடுவதற்குப் பெரும் தடைக் கற்களாக இருந்தார்கள். அனைத்து அனாச்சாரங்களிலும் முன்னின்று வழி நடத்தியவர்கள் இந்த ஆ­ம் பெரு மக்கள் தான். மக்கத்து காஃபிர்களின் இணைவைப்புக் கொள்கைகளை விட மிக மோசமான கொள்கையில் தான் அன்று நம்முடைய சமுதாயம் மூழ்கிக் கிடந்தது. மக்கத்து காஃபிர்களாவது துன்பம் வரும்போது அல்லாஹ்வை மட்டும் அழைப்பார்கள் என திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் இவர்களோ துன்ப நேரத்திலும் கூட 'முஹையித்தீனே' என்னை காப்பாற்றுங்கள்'' என்று அழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.மார்க்கத்தைப் போதிக்க வேண்டிய மதரஸாக்கள் மத்ஹபு வெறியை வளர்க்கக் கூடிய கூடங்களாகவும். அங்கு பயின்று வெளிவரும் மாணவர்கள் புரோகிதர்களாகவும் மாறிக் கொண்டிருந்தனர். வரதட்சணைக் கொடுமை தலை விரித்தாடியது. வட்டியை பாவம் என்று அறியாமலேயே சமுதாயம் அதில் மூழ்கிக் கிடந்தது.மார்க்க விஷயத்தில் மட்டும் அவர்கள் பேரிழப்பில் இருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தங்களுக்கெதிராக உலக அளவில் பின்னப்படுகின்ற சதிவலைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள், மதவெறியர்கள், நாத்திகவாதிகள், காதியானிகள் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் செய்கின்ற அவதூறுப் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க இவர்களுக்குத் தெம்பில்லை. இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் சினிமா நடிகர்களை தங்களுடைய வாழ்க்கைக்கு முன் மாதிரியாக்கி அவர்களுக்குப் பின்னால் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் கண்ட சிலர் இஸ்லாத்தையே வெறுத்து கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகவாதிகளாகவும் மாறினர்கள். சின்னஞ் சிறிய சமுதாயங்கள் கூட தங்களுடைய உரிமைகளுக்குப் போராடி இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு யாருமில்லை. போராட்ட வழிமுறைகளை அறியாமல் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருந்தது.மக்களை மார்க்க ரீதியாக சீர்திருத்தம் செய்யக்கூடிய எந்த இயக்கங்களும் அப்பொழுது தமிழகத்தில் இல்லை என நான் கூற வரவில்லை. இவற்றையெல்லாம் தவறு என விளங்கியவர்கள் அன்றைக்கும் இருக்கத்தான் செய்தனர். மக்கள் அந்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த நம்பிக்கையையும், ஆழ்ந்த பற்றையும் பார்த்தவர்கள் இதனை எதிர்த்துக் கூறினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைக் கவனித்துத் தங்களோடு அதனை நிறுத்திக் கொண்டனர். இவற்றை எதிர்த்தால் தங்கள் இயக்கத்திற்குக் கூட்டம் சேராது என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.இப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல் உள்ளதை உள்ளபடி தெளிவாகக் கூறி உண்மையான இஸ்லாத்தைப் போதிக்கக் கூடிய அழைப்பாளர்கள் இறைவனின் அருளால் உருவானார்கள். தமிழகத்தில் முஸ்­ம்களுக்கு மத்தியில் யாருடைய வார்த்தைகளுக்கும் இல்லாத தாக்கங்களும் எதிர்ப்புகளும் இவர்களுடைய வார்த்தைகளுக்கு இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் சத்தியப் பிரச்சாரம் ஒ­த்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவத்தைப் போதிக்கக் கூடியவர்களின் கேஸட்டுகளும் கட்டுரைகளும் அலசப்பட்டுக் கொண்டிருந்தன. உண்மையான தவ்ஹீதை விளங்கி அதைப் பின்பற்றிய சகோதரர்கள் சமுதாய ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள், அவர்கள் பள்ளிவாசல்களுக்குள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.இவர்கள் தொழுகையில் விரலை அசைக்கிறார்கள், நெஞ்சில் தக்பீர் கட்டுகிறார்கள், குழப்பம் செய்கிறார்கள் என அவர்கள் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும் அவர்கள் தடை செய்ததன் உண்மையான காரணம் அவர்களின் கொள்கைப் பிரச்சனை தான். காலம் காலமாக நாமும் நம்முடைய மூதாதையர்களும் செய்து வந்தவற்றை இவர்கள் கூடாது என்கிறார்களே இவற்றைச் செய்தால் நரகம் என்கிறார்களே என்ற கொள்கை வெறி தான் அவர்களைத் தூண்டிவிட்டது. மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த ஆ­ம் பெருமக்களும் இவர்களால் எங்கே நம்முடைய பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து ''ஜமாத்துல் உலமா''வின் மூலம் கடுமையான எதிர்ப்புகளும் நம்மைப் பற்றி அவதூறுப் பிரச்சாரங்களையும் கடுமையாகத் தூண்டிவிட்டனர். சமுதாயத் துரோகிகள், யூதக் கைக்கூ­கள், பிரிவினை வாதிகள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டனர்.''எரிகிற தீயில் பிடுங்கிய வரை லாபம்'' என்று கூறுவது போல் இந்த எதிர்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காக முஸ்­ம் லீக், ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இயக்கத்தினரும் இவர்களை கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் இந்த தவ்ஹீது பிரச்சாரம் மேலோங்கிய பிறகு இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய கிறிஸ்தவர்களுக்கும், மத வெறியர்களுக்கும், பிற மத சகோதரர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும், காதியானிகளுக்கும் ஆதாரப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பதிலளிக்கப்பட்டது. இஸ்லாத்தைத் தவறாக விளங்கியவர்களெல்லாம் அதனுடைய தனிச் சிறப்பை விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகளோடு விவாதம் செய்யப்பட்டு உண்மையான மார்க்கம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இஸ்லாம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். மத்ஹபு பிரிவினைகளுக்கும், தரீக்கா பிரிவினைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எடுத்துரைக்கப்பட்டது.இந்த ஏகத்துவப் பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தின் மூலம் அனைத்து அனாச்சாரங்களையும் இல்லாமல் ஆக்க முடியவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அதி­ருந்து விடுபடக்கூடிய சகோதரர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்குரிய எதிர்ப்புகளும் பலவிதங்களில் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.மார்க்க விஷயத்தில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டது. மார்க்க ரீதியாக இவர்களை எதிர்ப்பவர்கள் கூட இவர்களுடைய பொது நலச் சேவைகளையும், சமுதாயப் பிரச்சினைகளில் இவர்கள் காட்டுகின்ற தீவிரத்தையும் கவனித்து இவர்களுக்குப் பின்னால் அணி வகுக்கத் துவங்கினர். முஸ்­ம்களுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகள் அனைத்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. ஜனநாயக ரீதியாகப் போராடும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டனர். தங்களுடைய பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் மேல் மட்டம் வரை கொண்டு செல்லும் திறனைப் பெற்றனர்.மார்க்க ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும். பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வரும் இவர்களுக்கு மத்தியில் இப்பொழுது புதுவிதமான ஒரு சோதனையும் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சில தவ்ஹீத்வாதிகள், சத்தியப் பிரச்சாரத்தையே சதிவேலை எனக் கூறும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.இவர்களுடைய சத்தியப் பிரச்சாரத்தின் மூலம் கவரப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதைப் பார்த்த சில போ­கள் அவர்களைத் திசை திருப்புவதற்காக இவர்களைப் போன்று தங்களையும் காட்டிக் கொண்டு இவர்களோடு கலந்தனர். தங்களுக்கென்று செல்வாக்கையும் தேடிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் தங்களுடைய சுயரூபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று கூறுகின்ற இவர்கள் தர்ஹா வழிபாட்டுக்காரர்களை எதிர்த்தால் நியாயம் என்று கூறலாம். மத்ஹபு பிரிவினைகளையோ, பித்அத்தான அனாச்சாரங்களையோ, வரதட்சணை திருமணங்களையோ இவர்கள் எதிர்க்கவில்லை.மாறாக தர்ஹா வழிபாடுகளையும், மத்ஹபு பிரிவினைகளையும், வரதட்சனைக் கொடுமைகளையும், பித்அத்தான அனாச்சாரங்களையும் எதிர்த்து சமுதாய ரீதியாக, குடும்ப ரீதியாக, வட்டார ரீதியாக பிரச்சினைகளை எதிர் கொள்கின்ற மக்களைப் பார்த்து ''இவர்கள் சமுதாயத் துரோகிகள். சமுதாய ஒற்றுமையை சீர் குலைத்தவர்கள், பிரிவினைவாதிகள், சின்னஞ் சிறிய உப்புச் சப்பில்லாத விஷயங்களுக் கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். முஸ்­லிம்களைக் காஃபிர்கள் என்று கூறிவிட்டார்கள்'' என்றெல்லாம் விமர்சனங்களைத் துவக்கியுள்ளனர்.நாம் தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும். மவ்லூதுகளை எதிர்ப்பதும். தாயத்து, தகடுகளை எதிôப்பதும் வரதட்சனைக்கு எதிராக களமிறங்குவதும் இவர்களுக்குச் சின்னஞ் சிறிய விஷயமாகவும், சமுதாயப் பிரிவினைகளாகவும் தெரிகிறது. மறுமையை மறந்து இவ்வுலக வாழ்வை மட்டும் சிந்திக்கக் கூடிய இவர்கள் ''இதனை எதிர்ப்பதால் சமுதாயத்திற்கு என்ன இலாபம்?'' என்று கேட்கின்றனர்.உண்மையில் இவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் நாம் இந்த இணை வைப்புக்காரியங்களை எடுத்துரைக்கும் போது நிச்சயம் பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கத் தான் செய்வார்கள். இதைத் தான் அனைத்து நபிமார்களின் வாழ்வும் நமக்கு உணர்த்துகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவின் மூலம் வளரத் துடிக்கின்ற இவர்கள் அதற்கு இடையூறாக நாமும் நம்முடைய பிரச்சாரமும் இருப்பதினால் தான் இவ்வாறு கூறத் துவங்கியுள்ளனர். சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத் வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.இந்த சத்தியப் பிரச்சாரத்திற்காகத் தான் அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் அனுப்பியுள்ளான்.''அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம் (அல்குர்ஆன் 16:36)நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார் (அல் குர்ஆன் 7:59)ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 7:65)ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸா­ஹை அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 7:73)மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 7:85)இவ்வுலக வாழ்வு என்பது அற்பமானதாகும். மரணத்திற்குப் பிறகு நாம் சந்திக்கவிருக்கின்ற மறுமை வாழ்வு தான் நிரந்தரமானதாகும். மறுமையில் நம்மை காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவக் க­மா தான். இன்றைய சமுதாயமோ செல்வாக்கோ படை பலமோ அங்கு நமக்குப் பயனளிக்காது. பின் வரக்கூடிய ஹதீஸ்களி­ருந்து இந்தத் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்தி­ருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதி­ருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.பிறகு அல்லாஹ் அவனிடம் இதி­ருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். ''என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையி­ருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் ''என் இரடசகனே ஏதுமில்லை'' என்று கூறுவான்.அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் ''அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் க­லிமா இருக்கும்.நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். ''என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)'' என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்'' என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ர­லி) நூல்: திர்மிதி (2563)மற்றொரு ஹதீஸைப் பாருங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ''ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: அஹ்மத் 20349இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்கு தங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையி­ருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸி­ருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். ''உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையி­ருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?'' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ''ஆம்'' என்று கூறுவான். ''இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)'' என்று அவனுக்கு கூறப்படும். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: புகாரி 6538நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்கு செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது அவனுக்குப் பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லை யென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள். இதைத் தான் நாம் முத­ல் குறிப்பிட்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.ஒரு ஏகத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் சோதனைகளைச் சந்தித்து தான் தீரவேண்டும். நமக்கு நிரந்தர வெற்றி மறுமையில் தான் இருக்கிறது. எனவே இப்படிப் பட்ட உண்மையை உணர்ந்து உண்மையான சத்தியக் கொள்கையைப் பின்பற்றி அதனை எடுத்துரைத்து வாழக் கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.

புதன், 11 மே, 2011

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை




பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய
அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள்
கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள்
”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை”
விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும்
வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு
எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என
கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று
பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட்
நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு
”இந்த இடத்த
தொண்டி பாருங்க அதுல என்னோட முப்பாட்டனோட முப்பாட்டன் உடைய கை தடி கிடக்கும் அதுனால
இது என்னாடோ இடம்,
இந்த இடத்துல தான் நான் பிறந்தேன் அதுனால இது என்னோட இடம்
,
எங்க ”கடல காங்கேயன் ” சாமி மைனரு அவருக்கு பதிலான நான் வழக்கு போட்றேன் அந்த
சாமி இங்க தான் தூங்கினாரு அதுனால இந்த எடம் என்னோடதுன்னு”
ஆளுக்குள் ஆள் வழக்கு
பொட்ருவாங்களே ! இப்படி வழக்கு போட்டா அப்புறம் கோர்ட் என்ன கதியாவது ன்னு சுப்ரிம்
கோர்ட் சொல்லுது…