IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன், 28 ஜூலை, 2011

ரமலான்

நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் ரமழான் மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தியுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாதபொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பதுகடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்றகாரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக்கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால்மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக்காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தைஅடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களைசந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..

இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தினவாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள்விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி முஸ்லிம்).
‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், இன்னும்ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனைஇருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்துமற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்குமத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவுஇருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1-நோன்பு பரிந்து பேசும்:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர்அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவைவிட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில்பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில்தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை:
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத்பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்குஅன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்றுஇல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

3-கணக்கில்லாமல் கூலி வழங்கப்படும்:
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொருஅமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலிபெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அதுஎனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

4-நோன்பின் கூலி சுவர்க்கம்:
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல்இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாகநோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும்அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல்மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-நரகத்தை விட்டு பாதுகாப்பு:
‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள்நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபதுஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:
‘எவர் ரமழான் மாதத்தில்நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்புநோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
‘வாலிபர்களே! உங்களில்திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும்,மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத்தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்திபெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை(தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள்உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது(நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

10-கஸ்தூரியை விட சிறந்த வாடை:
‘எனது உயிர் எவன் கை வசம்இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்துவரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்

நிய்யத்தின் அவசியம்:‘
எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தைஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர்,
‘நவய்து ஸவ்ம கதின் அன் அதாஇ பர்ளி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதியவிடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு:
‘நீங்கள் ஸஹர் உணவுஉட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

‘நமது நோன்புக்கும் வேதக்கார ர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ளவேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).


முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதைஅவசரப்படுத்துவதும்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும்,நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில்இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக்கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்தஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்ததுஎனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாதகாலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையைஎதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னையபாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போதுவேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).

ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:

பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.

‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டுவிடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில்அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள்பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

Courtesy to safwanlanka

செவ்வாய், 5 ஜூலை, 2011

PFI,CFI, SDPI இவர்களின் கொள்கை என்ன ?




தங்களது இயக்கத்திற்கு ரோல் மாடலாக இஸ்லாத்தை எடுத்து கொள்ளாமல் அன்னளம் பெருமானரின் அரசியல் வியூகத்தை எடுத்து கொள்ளாமல் அல்லாவின் குர்ஆனை வழிக்காட்டாக எடுத்து கொள்ளாமல், தங்கள் இயத்தை மேண்மை படுத்துவதற்கு வளர்ப்பதற்கு நாட்டை சுடுகாடாக ஆக்கக்கூடிய், வளர்ச்சிப்பாதையை விட்டுவிட்டு அறியாமைகாலத்திற்கு கொண்டுசெல்லகூடிய, மற்றமுதாத்தை அழித்து ஒழுக்கக்கூடிய, இஸ்லாமும் அதன் கொள்கையும் அறவே இருக்ககூடாது என்று கங்கணம் கட்டிகொண்டிருக்கும் பாஸிச கொள்கை உடைய ஆர்.எஸ்.எஸ்,பி.ஜெ.பி,ஏ.பி.வி.பி,விஸ்வ ஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் இந்த அமைப்புகளையே ரோல்மாடலாக எடுத்துகொண்டு தங்கள் இயக்கத்திற்கும்,அரசியல் பிரிவிற்கும்,மார்க்க பிரிவிற்கும்,தீவிரவாதபிரிவிற்க்கும்,மாணவ பிரிவிற்கும் அந்த ஹிந்துத்வா தீவிரவாத இயக்கத்தை போலவே பெயரையும் வைத்துள்ளனர், செயல்ப்டுவதும் அவ்வாறே செயல்படுகின்றனர்.(படத்தை காணுக)

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும்அவர்களுக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு,இலட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொருஇயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர்மூச்சைப் போன்று அவசியமானதாகும்.கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைபோன்றது.




அந்த கொள்கை சரியா ? தவறா ? என்பது ஒரு புறம் இருந்தாலும் நிலையானகொள்கை இல்லையென்றால் எவராலும் முறையாக இயக்கம் நடத்த முடியாது.இத்தகையவர்கள் இயக்கம், இயக்கம் என்று எவ்வளவு கத்தினாலும் இயக்கத்தின்பெயரால் ஆதாயம் தேட நினைக்கும் கொள்கையற்ற கோமாளிகள் என்றேஇவர்களை கூற முடியும்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறிவருகின்றது.ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது.கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாகஉருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்க்கு முன்பே இவர்கள் பல்வேறு பெயர்களில் பலஇயக்கங்களாக இயங்கி வருகின்றனர்.

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக்கொண்டு தான் முதலில் இயக்கத்தை துவங்கினார்கள். ஜனநாயகம் என்பது ஷிர்க்(இனைவைப்பு) ஆகும், கொடி பிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தேர்தலில்ஓட்டுப் போடுவதும் கூடாது மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்க்குக் கீழ்வாழ்வது மார்க்கத்திற்க்கு விரோதமானது என்று பகிரங்கமாகப் பிரச்சாரம்செய்துவந்தனர். இந்த கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர்.

குஜராத் கலவரம் போன்ற நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறிமக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர். தங்கள் இயக்கத்தைவளர்ப்பதற்க்கு இந்த கலவரங்களை ஆயுதமாக பயன்படுத்தினர்.

ஆனால் இவர்களின் இக்கொள்கை முட்டாள்தனமானது என்பதைப் பொதுமக்கள்புரிந்து கொண்டனர். இவர்களின் வழிகெட்ட இக்கொள்கைக்கு மக்களிடம்வரவேற்பு கிடைக்காததால் இயக்கம் வளரவில்லை.

எனவே தனது கொள்கையை அப்படியே மாற்றி விட்டனர். இப்போது ஜனநாயகம்கூடும் என்கின்றார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கொடி தூக்கக் கூடாது என்றுசொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள். ஓட்டு போடுவதுகூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு ' எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் 'என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலைஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம். சரியான கொள்கைக்காக மாற்றம் செய்வதுதவறல்ல. இந்த மாற்றம் அவசியமானது.

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதைமுறையாக மக்களிக்கு அறிவிக்க வேண்டும். தங்களது பழைய நிலைபாடுதவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கைமாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்கவேண்டும்.

இயக்கத்தின் அடிப்படை கொள்கையை மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும்செய்யவில்லை. மாறாக, கள்ளத்தனமாகக் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.

இன்றைக்கு மார்க்க விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள்நிலவுகின்றன. சட்ட விஷயங்கள் மட்டுமல்லாமல் அடிப்படைக் கொள்கைவிஷயத்திலும் கூட இந்த வேறுபாடு இருக்கின்றது.

உதாரணமாக மரணித்தவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் கருதும்பரேலேவிகள் இருக்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டும்உரிய பின்பற்றுதல் என்ற அந்தஸ்தை, இமாம்களுக்கும் முன்னோர்களுக்கும்பெரியார்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்இருக்கின்றனர். இதே போன்று குர் ஆன் ஹதீஸ் மட்டுமின்றிநபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுவோரும் இருக்கின்றனர். குர் ஆன்ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று நம்பும்ஏகத்துவவாதிகளும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இயக்கமானாலும் மேற்கண்ட விஷயங்களில் இதுதான் தனது நிலைபாடு என்று தெளிவாகக் கூறி விடுகின்றனர். ஆனால் பாப்புலர்பிரண்ட் இயக்கத்தினர் மட்டும் இதிலிருந்து வேறுபடுகின்றனர்.

மேற்கண்ட மாறுபட்ட கொள்கையில் இது தான் தனது கொள்கை என்று எந்தஒரு கொள்கையையும் இவர்கள் குறிப்பிடுவதில்லை. இவற்றில் எதையாவதுஒன்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரச்சாரம் செய்வதில்லை.

கப்ரு வழிபாடு, சந்தனக்கூடு, கந்தூரி, மவ்லூது போன்ற இனைவைப்புகளைஇவர்கள் சரி காண்பவர்களா ? அல்லது எதிர்ப்பவர்களா ? மத்ஹபுகளையும் பித்அத்களையும் ஏற்பார்களா ? மறுப்பார்களா? இது போன்ற கேள்விக்கு யாராலும்ஆதாரத்துடன் பதில் கூற முடியாது. ஏனென்றால் இவர்கள் எந்த கொள்கையும்இல்லாத கொள்கையற்ற கூட்டமாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் மறுமை வாழ்வும் இந்த உலகத்தில் வாழும் போது அவன்கொண்டிருந்த கொள்கை அடிப்படையில் அது வெற்றி அல்லது தோல்வியைப்பெற்றுத் தரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இவர்கள்அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தங்களுடைய இயக்கம் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் இயக்கம் என்று கூறஇவர்களுக்கு அருகதை இல்லை. இஸ்லாமிய சமுதாய மக்களின் மறுமைவாழ்வை அழித்து நாசமாக்கக் கூடிய இணை வைப்புக் காரியங்களும் பித்அத்களும் இன்னும் பல தீமைகளும் மக்களிடையே பரவியிருப்பதைக்கண்கூடாகப் பார்கின்றனர். இவையெல்லாம் இஸ்லாத்திற்க்குப் புறம்பானவைஎன்பதை இவர்களும் புரிந்து வைத்துள்ளனர்.

இந்தத் தவறுகளை எச்சரித்து மக்களை இவற்றிலிருந்து காக்கும் கடமைஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்துக்கும் இருக்கின்றது. ஆனால் இவர்களோஇவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. இத்தகையவர்கள் சமுதாய நலனுக்காகப்போராடக் கூடியவர்கள் என்று எவ்வாறு கூற முடியும் ?

இத்தீமைகளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்யும் வேளையில் நமதுபிரச்சாரத்தை முடக்கும் வகையில் நமக்கெதிராகவும் இவர்கள்செயல்படுகின்றனர். 'மென்மை வேண்டும்; நளினம் வேண்டும்' என்று கூறி நமதுவேகத்தைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

நபிவழி அடிப்படையில் வாழ வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்து மக்களைநல்வழிப்படுத்தி வருகின்றோம். இவர்கள் சத்தியவான்கள் என்றால்இவ்விஷயத்தில் நம்மைப் போன்று இவர்களும் செயல்பட வேண்டும்.இல்லையென்றால் மெளனமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆனால் இவர்கள்நபிவழிக்கு எதிராக முட்டாள்தனமான வாதங்களை எழுப்பி மக்கள் காலாகாலத்துக்கும் வழிகேட்டில் நீடித்திருக்கக் காரணமாக இருக்கின்றனர்.

சுன்னத் என்பது கடமையல்ல. ஒற்றுமை என்பது பர்ழ் எனவே சுன்னத்தைவிட்டால் பரவாயில்லை, தொழுகையை நபியவர்கள் காட்டித் தந்தஅடிப்படையில் தொழுவது அவசியமில்லை. அவரவர் இஷ்டப்படி குருட்டாம்போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இதை தவறு என்றுவிமர்சணம் செய்ய கூடாது என்று வாதிடுகின்றனர்.

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்க்கு இதுபோன்ற கேடு கெட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவு கூசுவதில்லை.இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மைசெய்பவர்களாக இருக்க முடியாது


திங்கள், 4 ஜூலை, 2011

பராஅத்தும் பித்அத்தும்


நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை ஷாஃபான் மாதத்தில் TNTJ கிளைகளில் நோட்டிஸாக அடித்து வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டது!