IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

ஞாயிறு, 13 மே, 2012

திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?




கிறுத்துவ நண்பர்களே! நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள பைபிளை நாங்களும் இறைவனால் வழங்கப்பட்டது என நம்புகிறோம், ஆனால் அது பாதுகாக்கப் படாத (அதாவது அதில் உங்களின் மூதாதயர்களின் சொந்தக் கறுத்துகளும் கலந்துவிட்ட) காரணத்தால் அதனை இப்போது அமல் படுத்த கூடாது என்கிறோம்.
இறைவனால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன் ஆகும். மேலும் அது யுகமுடிவு வரை பாதுகாக்கப்படும் என்று இறைவனால் உத்திரவாதம் பெற்றுள்ளதுமாகும்.
சரி, திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?
இதற்கு பதிலளிப்பதற்கு முன் இறைவேதத்தின் முக்கிய பணி என்ன என்பதில் தெளிவுபெறுவது உகந்தது. "மறுமையில் நடக்கவிருக்கும் நிலைமைகளைக் கூறி எச்சரிக்கை செய்வதும், மனிதனின் வாழ்கைக்கு தேவையான சட்டங்களைக் கூறுவதும் இறைவேதத்தின் முக்கிய பணியாகும்".
ஆதம் நபி காலத்தில் சகோதரியை திருமணம் செய்ய அப்போதுள்ள இறைச்சட்டம் அனுமதித்து. இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டம் என்றாலும் இன்று அது செல்லாது. இதனை அறிந்ததாலேயே அச்சட்டத்தைப் பாதுகாப்பதாக இறைவன் வாக்களிக்க வில்லை. இதுபோன்ற காரணங்களாலே இதற்கு பின் வந்த வேதங்களும் (பைபிள் வரை) பாதுகாக்கப்படவில்லை.
நாம் இப்போது யுகமுடிவின் சமீபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆதலால் இறைவேதத்தின் கடைசி பதிப்பு நமக்கு வழங்கப்பட்டு விட்டது. அதுவே திருக்குர்ஆன் ஆகும். இதிலுள்ள சட்டங்களை யுகமுடிவு வரை அமல் படுத்துவதே வெற்றிக்கு ஒரே வழி ஆகும்.
(திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதில் தெளிவுபெற THE BIBLE AND QURAN IN THE LIGHT OF SCIENCE-MARIS PUGAIL, ஏசு இறைமகனா?-பி.ஜெ. போன்ற நூல்களும், டாக்டர்.ஜாகிர் நாயிக் Vs வில்லியம் கேம்பில் போன்ற விவாதங்களும் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.)
Thank you!
அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்.