IMPORTANT QUR'AN VERSE
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
FLASH
புதன், 16 மார்ச், 2011
பித்அத் செய்தால்?
பித்அத் செய்தால் தடாகம் இல்லை... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள். நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திரு...ப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். "இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றே'' என நான் கூறுவேன். "உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்'' என்று கூறப்படும். [அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 7049, முஸ்லிம்] அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாள் என் தோழர்கள் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். [அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6585, முஸ்லிம்] அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். "என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?'' என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. "எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்'' என விடையளித்தார்கள். நூல்: அபூதாவூத் 4121. அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!