இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை (நபியை) நாம் அனுப்பும் போதெல்லாம்
‘எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம்.நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
(அல் குர்'ஆன்:43:23)
இன்று உலகில் வாழம் முஸ்லிம்களில் கணிசமானோர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்றனர. இம்மத்ஹபுகளைத் தொகுத்தவர்கள் கண்ணியமிக்க இமாம்களான அபுஹனிபா,ஷாபிஈ, மாலிகி, ஹம்பலி, ஆகியோர்கள்தான் என்றும் நம்புகின்றனர்.
இந் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அதே போன்று மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இமாம்கள் மத்ஹபுகளைத் தொகுக்கவுமில்லை, தங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவுமில்லை.. இவ்விமாம்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இவர்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைகளே மத்ஹபுகள்.
இவர்கள் மரணித்து பலநுறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவைகளே இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான
1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
ஆசிரியர்: அபு ஸகரிய்யா முஹியித்திpன் இப்னு ஷரப் அன் நவவி
பிறந்த வருடம்: ஹிஜ்ரி 631
இறந்த வருடம்: ஹிஜ்ரி 676
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்
2.நூல் பத்ஹுல் முயுன்
ஆசிரியர்: ஸைனுத்திpன் இப்னு அப்துல் அஸிpஸ் அல்மலேபாரி
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நுpல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்
3.நூல் இஆனதுத் தாலிபின்
ஆசிரியர் முஹம்மத் ஷதா அத்திம்யாதி
பிறந்த வருடம்: ஹிஜ்ரி 1266
இறந்த வருடம்: ஹிஜ்ரி 1302
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்
ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஷாபிஈ மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
அதே போன்று இமாம் அபு ஹனிபா மரணித்து பலநூறு ஆண்டுகளுக்கு பின்னால் எழுதப்பட்டவைகளே ஹனபி மத்ஹபில் மார்க்கத்திpர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா)நூள்களான.
நூல் துர்ருல் முக்தார்
ஆசிரியர் பெயர்: முஹம்மது அலாவுதீன் ஹஸ்காபி
பிறந்த வருடம் :ஹிஜ்ரி 1025
இறந்த வருடம் :ஹிஜ்ரி 1088
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும்இடைப்பட்ட காலம் 900 ஆண்டுகள்.
நூல் பதாவா ஆலம்கீரி
ஆசிரியரின் பெயர்:முகலாய மன்னர் அவ்ரங்கசீப் காலத்து உலமாக்கள்.
எழுதப்பட்ட காலம் :ஹிஜ்ரி 1118
இமாம் அபூஹனீபாவிற்கும் இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 975 ஆண்டுகள்
நூல் :கன்ஜுத் தகாயிக்
ஆசிரியரின் பெயர் :அபுல் பரக்கத் அன்னாசாபி
இறந்த வருடம் :ஹிஜ்ரி 710
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 560 ஆண்டுகள்
நூல் ஹிதாயா
ஆசிரியரின் பெயர் :அலி பின் அபீபக்கர்
பிறந்த வருடம் :ஹிஜ்ரி 511
இறந்த வருடம் :ஹிஜ்ரி 593
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்.
அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.மேலும்.
நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக ...
1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்:
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.
ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15ஈகாழுல் ஹிமம் பக்கம் 100
‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.
ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
2. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்:
ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.
ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4ஈகாழுல் ஹிமம் பக்கம் 62
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.
ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 145
3. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!
ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.
நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை.
ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.
4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்:
என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!
ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.
ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுpற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்
முஸ்லீம்களே சிந்திப்பீர்களாக !