IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி, 14 ஏப்ரல், 2012

கிறித்தவ சபைகளுக்கு எதிராக மட்டும் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்?


கேள்வி :
சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, தாங்களும், உங்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்?
எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) கொலை வெறி தாக்குதல் நடத்துவது ஏன்?
இது போல் இந்து மதத்தை விமர்சிக்கவில்லையே ஏன்?
மற்ற மதத்தினரை விமர்சிக்கக்கூடாது; உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்குஎன்ற குர்ஆன் வசனத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆனால், நாங்கள் குர்ஆன் வசனத்தை கடைபிடித்து வருகின்றோம்.  எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை.
ஜெஸ்ஸி ராணி - மங்கலம்பேட்டை 


பதில் :

இந்து மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக்கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக்கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.

ஆனால், கிறித்தவ பிரச்சாரகர்களின் முழு நேர வேலையே இதுவாகத்தான் உள்ளது.

அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி,  தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, “குர்ஆனில் ஈஸாஎன்று நூல் வெளியிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் பயன்படுத்தும் கியாமத் நாள் என்ற பெயரில் நூல் வெளியிட்டு முஸ்லிம் அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கின்றனர்.

இந்த பாதிரிகள் ஆலிம் அப்துல்லாஹ்,  மவ்லவி பிலால் ஆகியோர் நற்செய்தி கூட்டங்களில் பேசுவதாக விளmபரம் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். ஆனால் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; செத்த பிணங்கள் உயிரோடு எழும்பி வருகின்றன  என்ற நிகழ்ச்சி போல் இதுவும் செட்டப் நிகழ்ச்சிதான். 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் திட்டி தபால் பெட்டி எண் மட்டும் போட்டு நோட்டீஸ்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்கள் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து நற்செய்தி என்ற பெயரில் தங்கள் மதத்தில் சேருமாறு கூறும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கை எல்லை மீறிப்போய்க் கொண்டு உள்ளது.

தங்கள் கல்விக் கூடங்களில் அனைவரும் இயேசுவைத் தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

ஆபாசப் புத்தகத்தை வேதமாக வைத்துக் கொண்டு எங்களை உங்கல் மதத்துக்கு அழைக்க வந்து விட்டீர்களா? பொய்களையும் புரட்டுகளையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் சிறந்த கொள்கை என்று சொல்கிறீர்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அனைத்து முஸ்லிம்களையும் தயார்படுத்தும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

இதனால் தான் விவாதக் களத்தில் சந்தித்து கிறித்தவ மதத்தை எங்களிடம் பிரச்சாரம் செய்ய அவர்களே வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தவே அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்க வற்புறுத்துகிறோம்.

இந்துக்களின் ஊர்களில் இவர்கள் வாலாட்டினால் அவர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கும் சமபவங்களை நாம் பார்க்கிறோம். அது போல் செய்யாமல் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அறிவுப்பூர்வமான நெருக்கடியை தான் ஏற்படுத்துகின்றோம்.

இத்தனை ஆண்டுகளாக கிறித்தவப் பிரச்சாரம் என்ற பெயரில் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடித்து வரும் பாதிரிமார்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்-அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு



இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் ‍அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிகொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார்.நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலலிக்காமல்) பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.அப்போது (அங்கிருந்து மக்களில் சிலர்), நபி(ஸல்) அவர்கள் அவர் கேட்ட கேள்வியை செவியுற்றார்கள்,ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி(ஸல்) அவர்கள் விரும்ப வில்லை.மற்ற சிலர் அவர் கேட்ட கேள்விஅயி நபி (ஸல்)கேட்டனர் என்றனர். நபி(ஸல்) தமது பேச்சை முடித்து விட்டு."மறுமை நாளை பற்றி என்னிடம் கேள்வி கேட்டவர் எங்கே என்றனர்.உடனே அல்லாஹ்வின் தூதரே நான்தான் என்றார்.அமானிதம்_அடைக்கலம் பாழ்படுத்தபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்"என்று சொன்னார்கள்.அதற்கு அந்த கிராமவாசி அது எவ்வாறு பாழ்படும் என்றார்.அதற்கு நபி (ஸல்) இவ்வாறு பதிளலித்தார்கள்:அதிகாரம் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்,என்று பதிலலித்தார்கள்.
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம் என்று கூறினார்கள்.அவர் அல்லாஹ்வின் தூதரே அது எவ்வாறு பாழ்படுத்தபடும் என்று கேட்டார். ஆட்சி அதிகாரம் நீதி நிர்வாகம் போன்ற எந்தபொறுப்பும் அதற்கு தகுதியற்றவரிடம் ஒப்படைக்கபடும்போது மறுமை நாளை எதிர்பார்த்துகொள்,என்று பதில்லித்தார்கள்
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_5496