IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்-அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு



இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் ‍அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிகொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார்.நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலலிக்காமல்) பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.அப்போது (அங்கிருந்து மக்களில் சிலர்), நபி(ஸல்) அவர்கள் அவர் கேட்ட கேள்வியை செவியுற்றார்கள்,ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி(ஸல்) அவர்கள் விரும்ப வில்லை.மற்ற சிலர் அவர் கேட்ட கேள்விஅயி நபி (ஸல்)கேட்டனர் என்றனர். நபி(ஸல்) தமது பேச்சை முடித்து விட்டு."மறுமை நாளை பற்றி என்னிடம் கேள்வி கேட்டவர் எங்கே என்றனர்.உடனே அல்லாஹ்வின் தூதரே நான்தான் என்றார்.அமானிதம்_அடைக்கலம் பாழ்படுத்தபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்"என்று சொன்னார்கள்.அதற்கு அந்த கிராமவாசி அது எவ்வாறு பாழ்படும் என்றார்.அதற்கு நபி (ஸல்) இவ்வாறு பதிளலித்தார்கள்:அதிகாரம் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்,என்று பதிலலித்தார்கள்.
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம் என்று கூறினார்கள்.அவர் அல்லாஹ்வின் தூதரே அது எவ்வாறு பாழ்படுத்தபடும் என்று கேட்டார். ஆட்சி அதிகாரம் நீதி நிர்வாகம் போன்ற எந்தபொறுப்பும் அதற்கு தகுதியற்றவரிடம் ஒப்படைக்கபடும்போது மறுமை நாளை எதிர்பார்த்துகொள்,என்று பதில்லித்தார்கள்
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_5496