IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பள்ளிவாசல்களில் செய்யவேண்டியவை செய்யகூடாதவை மற்றும்நிர்வாகம்-1

ஆராதணை அல்லாஹ்விற்கு மட்டும்

பள்ளிவாசல்கள் என்பது அல்லாவை வணங்குவதற்கு மட்டுமுள்ள இடமாகும்.

அங்கு படைத்தோணை விட்டுவிட்டு மற்றவர்களை துதிபாடுவதோ,ஆராதிப்பதோ,துதிப்பாடுவதோ,கபர்ஸ்தானங்களை கட்டிவைப்பதோ தடுக்கப்பட்ட‌ கூடாதசெயல்களாகும்

ஆயிஷா(ரலி)அரிக்கிரார்கள்

உம்முஹபீபா(ரலி)உம்முசல்மா(ரலி) அகிய இருவரும் அபிசீனியா ஹிஜ்ரத்தின்போது தாங்கள் பார்த்த ஒரு கிருத்துவ ஆலயத்தை பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தெரிவித்தார்கள். அவ்ரகள் எத்தகையோர்கள் எனில் அவர்களிடையே ஒரு நள்ள மனிதர் வாழ்ந்து இறந்துவிடும்போது.அவருடைய சமாதியில் வணக்கஸ்தலம் ஒன்றை நிருவி விடுவார்கள் அவர்கள்தாம் அல்லாஹ்விடம் மிகவும் மோசமாணவர்கள்.என்று சொன்னார். ஸஹீஹ் முஸ்லீம்_918

பள்ளிவாசளுக்குள் தடைசெய்யப்பட்டவை

நபி(ஸல்)அவர்கள்,"இந்த செடியிலிருந்து வெள்ளைப்பூண்டு சாப்பிட்டவர். மற்றோர் தடவை வெங்காயம்,சீமைப்பூண்டு,வெள்ளைப்பூண்டு சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை

நெருங்கவேண்டாம் ஏனெனில் மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிரார்களோ அதனால் வானவர்குளும் தொல்லை அடைகின்றனர்" என்றார்

அறிவிப்பாளர் ஜாபிர் பின் அப்தில்லாஹ்_முஸ்லீம்_976

ஒருமுறை நபி(ஸல்)அவர்கள் தொழுதுமுடித்ததும் ஒரு மனிதர் எழுந்து காணாமல்போன எனது சிவப்பு ஒட்டகத்திடம் என்னை அழைத்து செல்பவர் யார்? என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்)அம் வர்கள் உனது ஒட்டகம் கிடைக்காமல் போகட்டு. பள்ளிவாசல்கள் எதற்காக கட்டப்பட்டணவோ அதற்காக மட்டும்தான்" என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் புரைதா(ரலி)_முஸ்லீம்_984

மேலும் தொடரும்.....